Skip to main content

''இப்படி திரியும் மாட்டின் பாலைத்தான் சில ஹோட்டல்களில் வாங்குகிறார்கள்'' - அதிருப்தி தெரிவித்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

 Radhakrishnan, IAS expressed his displeasure, "They only buy milk from stray cows in hotels"

 

சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் பள்ளிச்சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் சாலையில்  நடந்து சென்றபோது, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென சிறுமியை முட்டி தூக்கி வீசியது. மாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிறுமியை மாடுகள் கடுமையாகத் தாக்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, மாட்டை விரட்டி சிறுமியைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்தச் சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், “சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது வெளியில் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மாடுகளைத் திரிய விடும் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது'' என தெரிவித்திருந்தார்.

 

 Radhakrishnan, IAS expressed his displeasure, "They only buy milk from stray cows in hotels"

 

தொடர்ந்து பொது இடங்களில் அலட்சியமாக மாடுகள் சுற்றித் திரிவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சாக்கடை பகுதியில் நீரில் இறங்கியபடி நின்ற மாட்டை சுட்டிக்காட்டி அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, ''இதுபோன்று திரிகின்ற மாட்டின் நிலைமையைப் பாருங்கள். சாக்கடைக்குள் நின்று கொண்டு அந்த நீரை குடிக்கிறது. இதிலிருந்து வரக்கூடிய பாலை இன்னமும் ஹோட்டல்கள் வாங்குகிறார்கள். தனி நபர்கள் எல்லாம் கறந்த பாலை வாங்குகிறோம் என்று தவறுதலான போக்கில் நடந்து வருகிறார்கள். நாம் வளர்ந்த நகரம் என்று வேற சொல்கிறோம். மாட்டிற்கும், கன்றுகுட்டிக்கும் நாம் எதிரானவர்கள் கிடையாது. அதை சரியாக பராமரித்து வைக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதை பொதுமக்களும், மாட்டை வளர்ப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 Radhakrishnan, IAS expressed his displeasure, "They only buy milk from stray cows in hotels"

 

விதண்டாவாதம் செய்து பேருந்தில் விபத்து ஏற்படுவதால் பேருந்து சேவையை நிறுத்த முடியுமா என்ற கேள்வி எழுப்புவது போல் பேசக்கூடாது. மாடுகளை சரியான கொட்டகையில் அடைக்க வேண்டும்; சரியான தீனி போட வேண்டும். அப்படி இல்லாமல் இப்படி தெருவில் விட்டால் எப்படி. அதேபோல் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்து இப்படி தெருவோரத்தில் போட்டு விடுகிறார்கள். இதனை அகற்றுவது மாநகராட்சியின் வேலையா? 18 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் இருக்கிறார்கள். இங்கு 70 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு நபரும் 500 கிராம் குப்பையை போட்டால் 6100 மெட்ரிக் டன் குப்பையை தினமும் நாம் அள்ளிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். நிறைய பேர் சொல்வது நியாயமான கருத்துகள் தான். ஆனால் அதே நேரத்தில் நாம் வளரும் மாநகரம். உலக அளவில் வளர வேண்டும் என்றால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நகர்ப்புற மக்கள் வாக்களிக்கத் தவறிவிட்டனர் " - ராதாகிருஷ்ணன் ஆதங்கம் !

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Urban people have failed to vote says Radhakrishnan

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையை திறக்க இரண்டு  சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும். ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது" என்று கூறினார்.

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.