நாகப்பட்டினம் அருகே சுனாமியில் இருந்து மீட்டு 18 ஆண்டுகளாக வளர்த்தபெண்ணை தமிழக உணவுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
கடந்த 2004- ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக டாக்டர் ராதாகிருஷ்ணன் பணியாற்றிய போது, சுனாமியில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளை அவர் தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர்களில் தமிழரசி என்பவர் எம்.சி.ஏ. முடித்து திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர்கிராமத்தில் வசித்து வருகிறார்.
அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் திடீரென்று வளர்ப்பு மகள் தமிழரசியின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். அவரிடம் உரிமையோடு தமிழரசி பேசியதை மீனவ கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.