நடிகர் கமல்ஹாசனின் அறுபது ஆண்டு கால சினிமா பங்களிப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 'கமல் 60’ எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிசென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் கச்சேரி நடந்தது. கமல்ஹாசனுடன் நடித்த நடிகர், நடிகைகள், பிரபலங்கள், உடன் பணியாற்றியவர்கள் வருகை தந்திருந்தனர்.

Advertisment

கமலுடன் எண்பதுகளில் ஜோடியாக நடித்த நடிகை அம்பிகா, ராதா ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். மேடையிலிருந்து கீழேவந்துகமல்ஹாசன் வந்திருந்தவர்களை வரவேற்ற பொழுது நடிகை அம்பிகா மற்றும் ராதாவையும்வரவேற்றார்.

Advertisment

 Radha kissed Kamal...

அப்பொழுது நடிகை அம்பிகா கமல்ஹாசனுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். நடிகை ராதாவோகமலஹாசனின்கன்னத்தில் முத்தமிட்டார். அப்போது மேடையிலிருந்த இளையராஜா கமலஹாசனை கமல் ”சார்... கமல் சார்...” என இருமுறை கூப்பிட்டார். ஆனால் அது அவருக்கு கேட்கவில்லை. அதனை அடுத்து ”இப்பொழுதெல்லாம் நாங்கள் கூப்பிட்டால் உங்களுக்கு காது கேட்காதே” என்று இளையராஜா கூற ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

மீண்டும் உரத்த குரலில் ”கமல் சார்...” என்று கூப்பிட இளையராஜா ”அதே மூடோடுவந்து என்னுடன் சேர்ந்து மேடையில் பாடுங்கள்” என்றார். அதன்பிறகு மேடைக்குச் சென்று கமல்ஹாசன் ''சுந்தரி நீயும் சுந்தரன் நானும்'' என்ற பாடலை பாடினார்.

Advertisment