Advertisment

ராசி மணல் அனை கட்டுமானப் பணியினை துவக்கிட  வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 16ல் உண்ணாவிரதப் போராட்டம்  - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

pr

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர கூட்டம் மன்னார்குடியில் இன்று (05.08.2018) நடைபெற்றது. மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகள் நிலை குறித்து எடுத்துரைத்தார். மாவட்ட செயலாளர்கள் தஞ்சை எம்.மணி, நாகை எஸ்.இராமதாஸ், திருவாருர் சேரங்குளம் எஸ்.செந்தில்குமார், மாவட்ட தலைவர்கள் தஞ்சை துரை பாஸ்கரன், நாகைபாலசுப்பிரமணியன், திருவாரூர் சுப்பையன் மன்னார்குடி நகர தலைவர் தங்கமணி, திருமருகல் ஒன்றிய தலைவர்சேகர், செயலாளர் மதியழகன் ஒரத்தநாடு மகேஸ்வரன், விஜயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisment

கூட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது...

Advertisment

தமிழ்நாட்டில் இவ்வாண்டு காவிரியின் உபரி நீர் மேட்டூர் அனை நிரம்பியதால் உடன் திறக்கப்பட்டு சுமார் 15 டிஎம்சி கடலில் கலந்துள்ளது.

தூர் வாரும் பணி மற்றும் பராமரிப்பு பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளில் ஊழல் முறைகேடுகள் செய்ததின் விளைவு பாசன கிளை ஆறுகள் பராமரிப்பின்றி அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான தண்ணீர் விடுவிக்கப்பட்டும் வாய்க்கால்கள் மூலம் பாசனப் பகுதிகளில் ஏரி,குளம், குட்டைகளை நிரப்புவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அனை திறக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் கடைமடைக்கு தண்ணீர் செல்வது வாடிக்கை. ஆனால் இவ்வாண்டு ஜீலை 19ல் திறக்கப்பட்ட தண்ணீர் 15 தினங்கள் கழித்து பெரும் போராட்டத்திற்கிடையே தற்போதுதான் ஆறுகளிலேயே கடைமடை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து ராசிமணல் அனை கட்டுமானப் பணியை உடன் துவங்கிடவும், பாசனத்திற்கென வனத்துறை போன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட நீர்பாசனத்துறையை உடன் உருவாக்கிடவும், ஊழல் முறைகேடின்றி வெளிப்படை தன்மையோடு தூர்வாருவது, பராமறிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மரபுவழி மருத்துவ முறைகளை வரன்முறைப்படுத்தி கொள்கை முடிவு எடுத்திட வலியுறுத்தியும், விவசாயிகளின் நலனை முன்னிருத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 16ல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடத்த உள்ளோம். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Mettur Dam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe