A rabid dog that bit; 20 people were injured

தெருநாய் கடித்ததில் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 12, 17 வது வார்டு பகுதிகளான திருவிக நகர், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை பகுதிகளில் சாலைகளில் சென்ற சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து சுமார் 10 க்கும் மேற்பட்டவர்களை தெருக்களில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் கை, கால்கள் போன்ற இடங்களில் கடித்துக் குதறி உள்ளது.

Advertisment

படுகாயமடைந்த அனைவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்து நாய்கள் கடித்து மருத்துவமனைக்கு சென்றதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் ஏற்கனவே பரபரப்பைஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 20 பேரை வெறிநாய் கடித்துக்குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அருகே உள்ள பனையாந்தூர் கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் படுகாயமடைந்த ஐந்து குழந்தைகள் உட்பட 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment