தமிழக தலைமை தகவல்ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Advertisment

தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தற்போது தமிழக தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ராஜகோபால் தற்போது இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக தமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலாபிரியா வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவி காலியானது. அதன் தொடர்ச்சியாக தலைமை தகவல் ஆணையராக யாரை தேர்வு செய்யலாம் என்று முதலமைச்சர் தலைமையில் தேர்வு குழு ஒன்று தேடுதல் குழுவை அமைத்தது.

R. Rajagopal

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சிங்காரவேலு தலைமையில் அந்த தேடுதல் குழுவானது அமைக்கப்பட்டது. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வெங்கடேசன் ஆகிய குழுவானது அமைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கான தகுதிகள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.அதன்படி பொது மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்கள், சட்டத்தில் முன் அனுபவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிர்வாகம், மேற்பார்வையில் ஆளுமை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதேபோல் விண்ணப்பிக்க கூடிய நபர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது, அரசியல் கட்சியைச் சாராதவராகவும் ஆதாயம் தரும் பதவிகளில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த தேடுதல் குழுவானது வந்திருந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவிடம் சமர்ப்பித்தது. இன்றைய தினம் காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேடுதல் குழு கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவதற்கான கூட்டம் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் குழுவில் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் மூன்று பெயர்களுடன் கூடிய அந்த இறுதிப் பட்டியலை ஆளுநரிடம் நேரில் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் தற்போது மாநில தகவல் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் தற்பொழுது ஆளுநரின் புதிய செயலாளராக ஆனந்தராம் விஷ்ணு பாட்டீல்நியமிக்கப்பட்டுள்ளார்