"படப்பிடிப்பு நடக்காததால் ரூபாய் 1,000 கோடி இழப்பு"- ஆர்.கே.செல்வமணி பேட்டி!

r k selvamani press meet at chennai vadapalani

சென்னை வடபழனியில் திரைப்பட படப்பிடிப்பு தொடக்கம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஃபெப்சித் தலைவர் ஆர்.கே.செல்வமணி, "படப்பிடிப்பு நடக்காததால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதுபோல் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். ஜூலையில் கேட்டபோது செப்டம்பர் முதல் வாரத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி தருவதாகக் கூறினார்கள். ஓ.டி.டி.யோ, தியேட்டரோ, டி.வி.யோ எதுவாக இருந்தாலும் படங்களைச் சண்டையின்றி வெளியிடலாம்" என்றார்.

இதனிடையே, மாஸ்க் அணியாதது குறித்து விளக்கம் அளித்த ஆர்.கே.செல்வமணி, மூச்சுவிடுவதில் பிரச்சனை இருப்பதால் மாஸ்க் அணிவதில்லை; கரோனா வந்தாலும் பரவாயில்லை. ஏற்கனவே தனக்கு கரோனா வந்துவிட்டது; அதற்காக ஒருமாத காலம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Chennai PRESS MEET rk selvamani
இதையும் படியுங்கள்
Subscribe