அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்தி உள்ளார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திண்டுக்கல்லில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், பழனி ரோடு, நாகல் நகர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவை நீக்கிவிட்டு பொய் வேஷம் போடும் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவை விட்டு வெளியேறு; உடனடியாக வெளியேறு' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.