''சீமான் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என்ற கேள்வி எழுகிறது''-திருமாவளவன் பேட்டி 

vck

ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடர்ச்சியாக ஈரோட்டில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் திமுக சார்பில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் சீமான் பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக பெரியாரிய இயக்கங்கள் சென்னையில் உள்ள அவரது அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி பரப்புரைகளில் பேசி வரும் சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில்இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். வட மாநிலத்தவர்கள் தான் அடுத்த இரண்டு தேர்தல்களில் அரசியலை தீர்மானிப்பார்கள். முன்பெல்லாம் மத்திய அரசு இந்தியை திணிப்பார்கள். இப்பொழுது இந்திக்காரர்களை திணிக்கிறார்கள் என சீமான் பேசியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், 'அவர் ஒரு பொருத்தம் இல்லாத அரசியலைப் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில்பெரியாரை எதிர்க்க வேண்டிய தேவை என்ன வந்தது? பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒன்று புரியவில்லை. பாஜக ஆதரவாளர்களில் வாக்கை பெறுவதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக இந்த யுத்தியை கையாளுகிறார் என்ற ஐயம் எழுகிறது.

பெரியார் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். அவருடைய சமகாலத்திலேயே அவரை பார்ப்பன உயர் சாதி அமைப்புகள் மிகக் கடுமையாக விமர்சித்தார்கள். வீழ்த்த முயற்சித்தார்கள் முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே வேலையை சீமான் செய்கிறார் என்றால் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என்ற கேள்வி எழுகிறது. அவர் செய்யும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது. யாருக்கு துணை போகிறார். தமிழ்த்தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியலை ஏன் செய்கிறார் என்ற கேள்வி எழுகிறது''என்றார்.

seeman Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Subscribe