Question about Sasikala ... AIADMK MP answered

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்எனவியூகங்கள்வெளியாகி வரும் நிலையில், சென்னைதி.நகரில்தங்கியுள்ள சசிகலாவை இன்று (12.02.2021) சந்தித்த பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமுமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும், காலம் அவர்களுக்குப்பதில் சொல்லும்'' என்றார்.

Advertisment

மேலும், ''ஒருவார காலமாக ஏன் ரொம்ப பதறுகிறார்கள் சில பேர். என்ன காரணம். நாங்களாக வந்தோம், நாங்களாக இருக்கிறோம். நான் ஏதாவது ஒரு வார்த்தை கண்ணியக் குறைவாக பேசி இருக்கேனா. கட்சிஆரம்பித்ததுஅதிமுகவை மீட்டெடுக்க என்று சொன்னது தப்பா" என்றும் கூறியிருந்தார்.

 Question about Sasikala ... AIADMK MP answered

இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தஅதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திடம் தொடர்ந்துசசிகலா குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்பொழுது''சசிகலா பற்றி அப்புறம் பேசுறேன்'' என நகர்ந்தார்வைத்திலிங்கம்.