vijay-ops

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மதுரையில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

நடிகர் விஜய், தான் முதல்வரானால் உண்மையாக இருப்பேன். நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நடிகர் விஜய் பற்றி கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஏழரைக்கோடி பேர் இருக்கிறார்கள். எல்லோருக்கும் முதல் அமைச்சராக ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.