Advertisment

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

Quarterly Holiday Extension

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச்செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செப்டம்பர் 18 ஆம் தேதியும், காலாண்டுத்தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி காலாண்டுத்தேர்வு முடிவடைகிறது.

Advertisment

இதையடுத்து பள்ளி மாணவர்களுக்குச் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவித்து தமிழக அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறைஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.மேலும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி அக்டோபர் 3 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

holiday
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe