காதலிக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் சண்டை; உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்

Quarrel over birthday present for girlfriend; A lover who took his own life

காதலிக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவது தொடர்பாக வந்த சண்டையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தசதீஷ்செல்வராணிஎன்பவர்களுடைய மகன் மோகன். 19 வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாகச்சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காதலியின் பிறந்தநாள் பரிசு தொடர்பாக இருவருக்கும் இடையில் சண்டை வந்துள்ளது. காதலியை மிரட்டுவதற்காக"நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என 'வாட்ஸ் அப்'பில் மோகன் தகவல் அனுப்பியுள்ளார். இதை விளையாட்டாக நினைத்த அவரது காதலி ஏதும் பதில் கூறாததால் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த நொளம்பூர் காவல்துறையினர் மோகன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது காதலியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் ஒன்றரை வருடங்களாகக் காதலித்ததும், பிறந்தநாளில் பரிசு வாங்கிக் கொடுப்பது தொடர்பாக வந்த சண்டையில் விரக்தி அடைந்த மோகன் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe