Advertisment

"தகுதியும், திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

publive-image

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (16/03/2022) நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா. எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர், அவர்களது கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தார். அத்துடன், மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.

Advertisment

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது! திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல! நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து திராவிடமாடலில் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Tweets Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe