Skip to main content

கேரள அரசின் இடையூறுகளை சமாளித்து நீர் சேமித்த அதிகாரிகளுக்கு பாராட்டு!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
periyar dam


தமிழகத்திற்கு  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இதுவரை 30 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள அரசின் இடையூறுகளை சமாளித்து நீர் சேமித்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் பாராட்டு. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக இருமுறை அணை 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

theni district, periyar dam water opening cm palanisamy order

 

 

பெரியாறு அணையில் இருந்து வரும் அக்டோபர் 7- ஆம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், பெரியார் அணையிலிருந்து பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேனி மாவட்டம் 18ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து (07/10/2020) முதல் 30 நாட்களுக்கு, வினாடிக்கு 98 கனஅடி வீதம், மொத்தம் 255 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

 

பி.டி.ஆர். மற்றும் பெரியார் வாய்க்கால் நிலங்களுக்கு (07/10/2020) முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1,037 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட  ஆணையிட்டுள்ளேன்.

 

இதனால், தேனி மாவட்டம், 18ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள், உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்' இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.