/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chem235555.jpg)
கனமழை காரணமாகநீர்வரத்து அதிகரித்ததால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தலா 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 21 அடியை எட்டியதைத் தொடர்ந்து புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 2,550 கனஅடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)