கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரைப்பாளையம் பகுதியை சேர்ந்த அலாவுதீன்(26) என்பவர் தன் வீட்டின் பின்புறம் போதைபொருளான கஞ்சாவை விற்பனை செய்வதாக புவனகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanja1.jpg)
இதனைத் தொடர்ந்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலாவுதீனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைபற்றியுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக இவரது கூட்டாளிகள் யார்? இவருக்கு எப்படி கஞ்சா வருகிறது என்று விசாரணை செய்துவருகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanja2.jpg)
Follow Us