புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 1998- ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இன்று அதிகாலை உடைக்கப்பட்டு தலை தனியாக கிடந்தது.
இந்த தகவல் வேகமாக பரவியதால் திராவிடர் கழகத்தினரும், திமுக எம்எல்ஏ மெய்யநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மா. செ. கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் என பலரும் குவிந்தனர்.
தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். உடைக்கப்பட்ட சிலையை மூடுவோம் உடைத்தவர்களை கைது செய்வோம் என்றார். ஆனால் கைது செய்யும் வரை சிலையை மூடக்கூடாது என்றனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் கீழ் மெய்யநாதன் எம்எல்ஏ தலைமையில் காத்திருப்பு போராட்டமும் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.