Advertisment

புதுமைப்பெண் திட்டம்: 1.94 லட்சம் மாணவிகள் பயன்

puthumai penn scheme tamil nadu girl students benifit

Advertisment

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர்5 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்ந்த பிறகு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உயர்கல்வி அளித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பப்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் கல்வியாண்டில் சுமார் 1.12 லட்சம் மாணவிகளும், 2022-2023 ஆம் கல்வியாண்டில் 81,149 மாணவிகளும் என கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.94 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe