Advertisment

கல்குவாரியில் வெடி விபத்து -ஒருவர் பலி 

f

புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி அருகே நக்கீரர்வயல் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவருக்கு சொந்தமான ராஜராஜ சோழன் என்ற கல்குவாரி உள்ளது. இங்கு பாறைகள் உடைக்கும் பணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிளார்கள் வேலை செய்து வருகின்றனர். பாறைகள் உடைக்கபயங்கரமான வெடிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அப்பகுதி குவாரிகள் தடைசெய்யப்பட்ட வெடிகளை பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறனாலும் நடவடிக்கை இல்லை.. இந்த வெடிகளால் பழமையான திருவேங்கைவாசல் கோயில் உள்பட பல கோயில்கள் விரிசல்விட தொடங்கியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குவாரியில் கற்களை எடுக்க அந்த குவாரியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வெடி வைத்துவிட்டு திரும்பியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை கல்குவாரியில் வைத்த வெடி வெடித்து விட்டதா என்று பார்ப்பதற்காக கல்குவாரியில் பணிபுரியும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சேதுபதி மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட இருவர் கல்குவாரிக்கு சென்றுள்ளனர். கல் குவாரியில் வைத்த வெடி முழுமையாக வெடிக்காமல் இருந்துள்ளது, இதனையடுத்து சேதுபதியும் சின்னதுரையும் அதை சோதித்து பார்க்கும் போது வெடி வெடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சேதுபதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த சின்னத்துரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடிக்கடி அப்பகுதியில் கல்குவாரிகளில் வெடி விபத்து நடப்பது வழக்கமாகிவிட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறுகின்றனர்.

p
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe