புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ளது கொல்லன்வயல் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவரது மகன் முத்துராமன் (31). பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரும் வேலை செய்ததால், அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

Advertisment

puthukottai youth in assam needs medical help

கடந்த வாரம் முத்துராமனை அவரது நண்பர் அசாம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது 21 ந் தேதி இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். நினைவு இழந்த நிலையில் இருவரையும் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு முத்துராமனின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு சென்ற உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் முத்துராமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் உயிரை காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டனர்.

Advertisment

அதன் பிறகு எப்படி அவ்வளவு தொலைவிற்கு கொண்டு செல்வது என்று தினறிய உறவினர்கள் சென்னையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை சந்தித்து உதவி கேட்டுள்ளனர். அவரும் துறை செயலாளர் மூலம் அசாம் மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது பற்றி அறிந்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதே போல சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் கவனத்திற்கும் இந்த விஷயம் கொண்டுசெல்லப்பட்டு உதவி கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரம், இந்த விஷயத்தில் முழு முயற்சி எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அசாமில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல சுமார் 34 மணி நேரம் ஆகும் என்பதால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அழைத்துச் செல்ல முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

ஒரு இளைஞரின் உயிரை காக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், சிவகங்கை தொகுதி எம்.பி.யும் முயற்சி எடுத்திருப்பதை பார்த்து முத்துராமன் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி கூறியுள்ளனர்.