ADVERTISEMENT

வரலாறு முக்கியம் அமைச்சரே..! 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதா அதிமுக? 

12:40 AM May 04, 2019 | nagendran

ADVERTISEMENT

ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக உள்ளூர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நியமிக்கப்பட்டிருந்தாலும், தோல்வி பயத்தில் விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டம் வரை அமைச்சர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் களம் இறக்கி உள்ளது அதிமுக.

ADVERTISEMENT

நேற்று (03-05-2019)தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்து நகரில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் காமராஜ், "ஒட்டப்பிடாரம் என்பது அதிமுகவின் கோட்டை. ஒரே ஒருமுறை தான் இங்கே திமுக வென்றிருக்கிறது. அதிமுக 2-ஆக பிளவுபட்டிருந்த நேரத்தில் (1989- தேர்தலில்) திமுக வென்றிருக்கிறது. அதுவும் அமைச்சர் (கடம்பூர் ராஜூ) சொன்னதைப் போல வெறும் 600 ஓட்டில் தான் அதிமுகவை திமுக வீழ்த்தியது" என்றார்.

ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. "1989-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்தையா 25,467 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்த இடத்த பிடித்தது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேலுச்சாமி - வாக்குகள் 23,724, அதிமுகவின் ஜெ. அணி சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 18,507. ஆக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள வித்தியாசம் 6,960. ஆனால், 600 ஓட்டில் தோற்றதாக பெருமை பேசிக் கொள்கின்றனர் இந்த அமைச்சர்கள். அந்த தேர்தலில் அதிமுக 3-வது இடத்தை பிடித்தது என்பதை அமைச்சர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அதிமுக நிர்வாகிகளே என்று சொல்லுகிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT