Skip to main content

வரலாறு முக்கியம் அமைச்சரே..! 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதா அதிமுக? 

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக உள்ளூர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நியமிக்கப்பட்டிருந்தாலும், தோல்வி பயத்தில் விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டம் வரை அமைச்சர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் களம் இறக்கி உள்ளது அதிமுக.

 

a

 

நேற்று (03-05-2019)தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்து நகரில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் காமராஜ், "ஒட்டப்பிடாரம் என்பது அதிமுகவின் கோட்டை. ஒரே ஒருமுறை தான் இங்கே திமுக வென்றிருக்கிறது.  அதிமுக 2-ஆக பிளவுபட்டிருந்த நேரத்தில் (1989- தேர்தலில்) திமுக வென்றிருக்கிறது. அதுவும் அமைச்சர் (கடம்பூர் ராஜூ) சொன்னதைப் போல வெறும் 600 ஓட்டில் தான் அதிமுகவை திமுக வீழ்த்தியது" என்றார்.

 

a

 

ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. "1989-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்தையா 25,467 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்த இடத்த பிடித்தது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேலுச்சாமி - வாக்குகள் 23,724,  அதிமுகவின் ஜெ. அணி சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 18,507.  ஆக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள வித்தியாசம் 6,960. ஆனால், 600 ஓட்டில் தோற்றதாக பெருமை பேசிக் கொள்கின்றனர் இந்த அமைச்சர்கள். அந்த தேர்தலில் அதிமுக 3-வது இடத்தை பிடித்தது என்பதை அமைச்சர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அதிமுக நிர்வாகிகளே என்று சொல்லுகிறார்கள்.

a


 

சார்ந்த செய்திகள்