நக்கீரன் வெளிக்காட்டிய, ஏழை மாணவி போரம் சத்தியாவுக்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கிய எஸ்.பி. பாலாஜிசரவணன்!

puthukottai SP met boram sathya

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தொகுதியில் உள்ள பெருங்களூர் ஊராட்சி, போரம் கிராமத்சை் சேர்ந்த ராமையா மகள் சத்தியா மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயோடு, குடியிருக்க வழியின்றி மழையில் கரைந்த மண் சுவர்களைக் கொண்டசிறிய குடிசையில் வசித்துவந்தார்.மேலும், விவசாயக் கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் கூலியை வைத்து குடும்பச் செலவுகளையும் பார்த்துக்கொண்டு தனது பள்ளிப்படிப்பையும் முடித்திருக்கிறார்.

அடுத்து கல்லூரிக்குச் சென்று படித்து அரசுப் பணிக்குப் போக வேண்டும். அதற்கு முன்பு தனக்காகக் 'கதவு வைத்த ஒரு வீடு வேண்டும்' என்று கரோனா நிவாரணம் வழங்க வந்த மக்கள் பாதையினரிடம் சத்தியா சொல்ல, மக்கள் பாதையினர் நக்கீரன்கவணத்திற்கு கொண்டு வந்தனர். செம்படம்பர் 3ஆம் தேதி மதியம் மாணவி சத்தியாவைச் சந்தித்து அவரைப்பற்றிய முழு தகவல்களையும் சேகரித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்ரி கவணத்திற்கு கொண்டு சென்றபோது அனைத்து உதவிகளையும்செய்வதாகஆட்சியர் உறுதி அளித்தார். இவை அனைத்தும் நக்கீரன் இணையத்தில் வீடியோ மற்றும் செய்தியாக செப்டம்பர் 3ஆம் தேதி மாலையே வெளியானது. இந்தச் செய்தி மற்றும் வீடியோ வெளியான நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் உதவிகள் கிடைக்கத் தொடங்கியது.

அடுத்த நாள் 4ஆம் தேதி காலை ஆட்சியரின் உத்தரவின்படி வருவாய்த் துறையினர், சத்தியாவின் போரம் கிராமத்திற்குச் சென்று அவருக்குவீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வுகள் செய்தனர். ஆனால், அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு மனைப்பட்டா வழங்க முடியாது என்ற நிலையில் மாற்று இடம் தேர்வு செய்து ஆடசியருக்கு கோப்பு அனுப்பி வைத்தனர்.

அதே நாளில் நக்கீரன் இணையத்தில் வெளியான வீடியோவைப் பார்த்த பிறகு இருப்புக்கொள்ளாமல் சிறிதும் தாமதிக்காமல் அந்த மாணவி வீட்டிற்குச் சென்று சில உதவிகள் செய்ததுடன், உனது படிப்பு முதல் போட்டித் தேர்வு பயிற்சிகள் வரை அனைத்தையும் ஏற்பதாக உறுதியளித்து, உடனடியாக தனது நண்பர் நடத்தும் போட்டித் தேர்வு மையத்தை தொடர்பு கொண்டு, மாணவி சத்தியா பட்டப்படிப்பு முடித்தவுடன் அரசு அதிகாரி ஆவதற்கான போட்டித் தேர்வு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் எஸ்.பி பாலாஜி சரவணன். சத்தியா பற்றிய விபரங்களைக் கேட்ட எஸ்.பி பாலாஜி சரவணனின் நண்பர் சத்தியா படிப்பிற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்பதுடன் இப்போதே போட்டித்தேர்வுகளுக்கான புத்தகம் அனுப்புவதாக உறுதி அளித்தார். மேலும் 2 வருடங்கள் வரை பயிற்சிக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றார். இதை எஸ்.பி மாணவியிடம் கூறினார்.

Ad

சொன்னது போலவே இன்று செப்டம்பர் 15ஆம் தேதி மாணவி சத்தியாவை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வழங்கி, 'நன்றாகப் படித்து உயர்ந்த பதவிக்கு வரவேண்டும்' என்றார். 'என் மீது நம்பிக்கை வைத்து இத்தனை உதவிகள் செய்துள்ளீர்கள். நிச்சயமாக உயர்ந்த இடத்திற்கு வருவேன்' என்றார்,மாணவி சத்தியா கண்ணீர் மல்க. அங்கிருந்த போலிசார் கூறும்போது, “எஸ்.பி சார் சொன்னதை செஞ்சுட்டார். இனி நீதான் சாதிக்கனும்” என்று அனுப்பி வைத்தனர்.

இதேபோல மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும் நம்மிடம் உறுதி அளித்தது போல வீட்டுமனைப் பட்டா, பசுமை வீட்டுக்கான உத்தரவு, கல்லூரியில் சீட், விடுதியில் சீட், மனநலம் பாதிக்கப்பட்ட தாயாருக்கு மாதாந்திர உதவித் தொகைவழங்க உத்தரவிட்டுஇருந்தார். ஊராட்சி மன்றத்தலைவர் வீடு கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பல தரப்பினரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe