puthukottai Municipality workers Municipality commissioner answer

புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த 2 மாதமாக சம்பளம் இல்லாமலேயே வேலை செய்துகொண்டிருக்கும், சுமார் 140 ஊழியர்கள்சம்பளம் கேட்டு நகராட்சி ஆணையர் அறையை முற்றுகையிட்டனர்.

Advertisment

சம்பளம் கொடுக்கும் அளவுக்குக் கணக்கில் பணமில்லை. மேலே கேட்டிருக்கிறேன் பணம் வந்ததும் சம்பளம் கொடுப்போம் என்று ஆணையர் ஜகாங்கிர் பாட்ஷா ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

Advertisment

போன மாதம் சம்பளம் கிடைக்கல இந்த மாதமும் முடியப்போகுது. இப்படி 2 மாதம் சம்பளம் வாங்காமல் எங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுது. வீட்டு வாடகை கொடுக்கக் கூட வசதி இல்லை என்று கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆணையரிடம் பேசியிருக்கிறார். அவரிடமும் ஆணையர் பணமில்லாத காரணத்தினால்தான் சம்பளம் கொடுக்க முடியவில்லை. விரைவில் கொடுத்துவிடலாம் எனத் தெரிவித்திருக்கிறார். பின்னர், வெளியேவந்த முன்னாள் அமைச்சரும் மக்களிடம் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

அதற்குள் முற்றுகைப் போராட்டம் குறித்துதகவல் அறிந்துவந்த போலீசார்,ஊழியர்களிடம் சமாதானம் செய்து போராட்டத்தைக் கைவிடச் சொன்ன போது, 'நாளை ஒரு நாள் பார்ப்போம்' சம்பளம் தரவில்லை எனில்,நாளை மறுநாள் முதல் மீண்டும் போராடுவோம் என்று சொல்லி கலைந்து சென்றனர். வேலைகளை விரட்டி வாங்குவதுபோல சம்பளத்தையும் காலத்தில் கொடுக்கலாம்தானே என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.