Advertisment

அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை! - சித்தப்பா 'தற்கொலை'!

puthukottai, keeramangalam girl child case cousin passes away

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் 13 வயது சிறுமி. இவரின்தாய், 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தந்தையும் பிழைப்பிற்காக கோவைக்குச் சென்றுவிட்டார். போகும்போது, தன் அப்பா, அம்மாவோடு தம்பி செந்திலிடமும்மகளைக்கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச்சென்றுள்ளார். அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில், சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், செவ்வாய்க் கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியைக் கண்டெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் இருந்த சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்றே கிளம்பி ஊருக்குவந்த தந்தை, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தொடர்ந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் 7 மாத பெண் குழந்தை இருந்தது. இதனால் பெரும் அதிர்ச்சிஏற்பட்டது. அதன் பிறகு நடந்த விசாரணையில், சிறுமியின் சித்தப்பா செந்தில் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தலைமறைவாகி இருந்த செந்திலை பிடிக்க 2 தனிப்படை போலீசார்தேடிவந்தனர்.

Advertisment

2 நாட்களாக சமூக வலைதளங்களில்செந்தில் படத்தை வெளியிட்டு போலீசார் தேடிவந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கொத்தமங்கலம் தெற்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில், சிறுமியின் சித்தப்பா செந்தில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

அண்ணன் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பாவை போலீஸ் தேடும் நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe