Advertisment

விமானப்படை அதிகாரி அபிநந்தன் வருகையை மரக்கன்று நட்டு கொண்டாடிய மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள், மேஜைகள், மற்றும் பல்வேறு பொருட்களை கிராம மக்கள் கல்வி சீராக கொண்டு வந்து கொடுத்தனர். இந்த விழா திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன் தலைமையில் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ் முன்னிலையில் நடந்தது. கிராம மக்கள் கொண்டு வந்த கல்வி சீர் கொண்டு வந்த போது அவர்களை மாணவர்கள் ஆரத்தி எடுத்து வணங்கி வரவேற்றனர். பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியை பூமொழி பெற்றுக் கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார். கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment

se

இந்த நிலையில் இந்திய விமானப்படை அதிகாரி பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா வருவதை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் பலா மரக்கன்று நட்டு கொண்டாடினார்கள்.

se

Advertisment

இது குறித்து மரம் தங்க கண்ணன் கூறும் போது.. இந்த சேந்தன்குடி கிராமத்தில் மரம் தங்கச்சாமி இருக்கும் வரை தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள், மற்றும் முக்கிய தினங்களில் அடையாளமாக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது வழக்கம். அவர் வைத்த ஏராளமான மரங்கள் புயலில் சாய்ந்தாலும் பல இடங்களில் அடையாளமாக நிற்கிறது. அதே போல தான் இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி இருந்தாலும் நல்லுறவு அடிப்படையில் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதனால் அந்த தினத்தை நினைவு கூறும் விதமாக அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பலா மரக்கன்று நட்டுள்ளனர். இந்த மரக்கன்று வளரும் போது அடுத்து வரும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எதற்காக இந்த கன்று நடப்பட்டது என்பதை பார்த்து அறிந்து கொள்வார்கள் என்றார்.

abinanthan Keeramangalam puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe