Advertisment

இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி.. மரண குழியில் தள்ளிய காமுகன் கைது.. உடந்தையான உறவுகளுக்கு வலை

k

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ளது குளமங்கலம் வடக்கு கிராமம். முற்றிலும் விவசாய கிராமம். மழை பொய்த்ததால் விவசாயமும் பொய்த்தது. அப்படியான விவசாய குடும்பத்து பிள்ளைகள் குடும்ப வறுமையை போக்க கடைகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படித்தான் சித்திரவேல் மகள் கஸ்தூரியும் 28 நாட்களாக ஆலங்குடியில் உள்ள வெங்கடேஸ்வரா மெடிக்கல்லுக்கு வேலைக்கு போனார். கஸ்தூரியின் திறமையை பார்த்து காலையில் கடையை திறக்கும் பொறுப்பையும் குறுகிய காலத்தில் கொடுத்தார் முதலாளி.

Advertisment

சில நாட்கள் கடை சட்டரை திறக்க சிரமப்பட்ட கஸ்தூரிக்கு உதவி செய்வது போல வந்தான் குட்டியானை ஓட்டுநர் நாகராஜன். சில நாட்கள் அண்ணன் தங்கையாக அறிமுகமானான். அடுத்த சில நாட்களாக காதல் வலை வீசினான். மொத்தம் 10 நாளில் வலையில் விழ வைத்துவிட்டான். ஓய்வு நேரங்களில் காதல் கிரக்கமான பேச்சுகளை செல்போனில் பேசினான். தனிமை சந்திப்புக்கு ஏற்பாடுகளையும் செய்தான்.

Advertisment

கடந்த 28 ந் தேதி வேலைக்கு போன கஸ்தூரி வீடு திரும்பவில்லை. பதறிக் கொண்டு தேடி ஓடினார்கள் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்கள் ஆனால் 31 ந் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் கடலுக்குச் செல்லும் ஆற்று வாய்க்காலில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு கல்லும் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது தான் கஸ்தூரியுடன் தைலமரக்காட்டில் உல்லாசமாக இருந்த போது வலிப்பு வந்து இறந்துட்டா சாக்கு மூட்டையில கட்டி ஆற்றில் வீசிட்டேன் என்றான்.

இந்த நிலையில் தான் கஸ்தூரியின் உறவினர்கள் பல கிராமங்களிலும் மறியல் செய்ய 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகராஜனுடன் கொலையில் சம்மந்தப்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நாகராஜனிடம் முறையாக விசாரித்த பிறகு தான் பாதி வாய் திறந்திருக்கிறான்.

n

கஸ்தூரியை காதலிப்பது போல என் வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்தேன். 28 ந் தேதியும் ஆலங்குடி ஆண்டிகுளத்தில் உள்ள என் சித்தி பொன்னு வீட்டில் தனிமையில் இருந்த போது எனக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்க பாட்டி போயாச்சு என்று சொன்ன போது என்னை அனுபவித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் கல்யாணமா என்று சண்டைப் போட்டா.. அதனால தள்ளி விட்டேன். சுவற்றில் மோதியதும் இறந்துட்டா . அப்புறம் சடலத்தை மறைக்க என் உறவினர்கள் உதவி செஞ்சாங்க என்று மறு வாக்குமூலம் கொடுத்த பிறகு ஆலங்குடி நீிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் ஆலங்குடி போலிசார். மேலும் நாகராஜனால் அடையாளம் காட்டப்பட்ட நபர்களையும பிடித்த விசாரனை நடந்து வருகிறது.

இதன் பின்னர்தான் கஸ்தூரியின் உறினர்கள்.. கஸ்தூரியை திட்டமிட்டு காதல் வலையில் விழவைத்து அழைத்துச் சென்ற நாகராஜன் கூட இன்னும் சிலர் இணைந்து தான் கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள மறைத்து சடலத்தை மறைத்தவர்கள் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். ஆனால் உண்மையான கொலையாளிகள் முழுமையாக பிடிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் மறுபடி போராட்டம் தான் என்றவர்கள்.. இந்த நாகராஜன் இதே போல இன்னும் சில பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்துவிட்டு கழட்டி விட்டிருக்கிறான். இதில் கஸ்தூரியும் சிக்கி இப்ப சடலமாகிட்டா.. பெண்களை காதல் வலை வீசி பிடிப்பதும் பிறகு கழட்டி விடுவதும் வழக்கமாக வைத்திருக்கிறான். இப்போது தான் சிக்கி இருக்கிறான் என்றனர்.

பிரேதப்பரிசோதனை முடிவுக்கு பிறகு பலரும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

kasthuri nagarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe