Advertisment

இளைஞர் கொலை; உறவினர்கள் சாலை மறியல்

அறந்தாங்கியில் கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலையாளியை பிடிக்க கோரி உறவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

protest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - காரைக்குடி சாலையில் பஞ்சர்கடை நடத்தி வந்தவர் முருகேசன் (35). நேற்று இரவு வீட்டுக்குச் செல்லவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டை சாலையில் ஒரு அடர்ந்த கருவேலங்காட்டுப் பகுதியில் முகம் கல்லால் அடித்து சிதைக்கப்பட்ட நிலையில் சடலாக கிடந்தார்.

Advertisment

protest

அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை காணவில்லை.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ் பார்வையிட்டார். போலீசார் தடயங்களை சேகரித்தனர். முருகேசன் கொலைக்கு காரணம் என்ன என்பதோ கொலையாளிகள் யார் என்பதோ தெரியாத நிலையில் விசாரணை தொடர்கிறது. இந்த நிலையில் முருகேசனின் உறவினர்கள் கொலையாளிகளை பிடிக்க கோரி மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

youth murders
இதையும் படியுங்கள்
Subscribe