Skip to main content

ரூ.4 லட்சத்திற்கு ஸ்பெயின் நாட்டிற்கு குழந்தை விற்பனை.. குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த்

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
puthukottai


 

புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார்..

மத்திய அமைச்சரின் ஆலோசனைப்படி, நான் தலைவராக சென்ற குழு மூலம் கடந்த வாரம்.. மேற்குவங்க மாநிலம் ஆரார்யா பகுதியில் காய்கறி மூட்டைகளை போல கட்டி கடத்தப்பட்ட 5 குழந்தைகளை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய மருத்துவ குறிப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாங்கள் செய்த விசாரனையில் ஸ்பெயின் நாட்டிற்கு ராஜ்குமார் என்ற குழந்தை ரூ 4 லட்சத்திற்கு விற்க்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து அந்த குழந்தையை மீட்கும் முயற்சியாக ஸ்பெயின் தூதரகத்தில் ஆவணங்களுடன் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர்கள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2500 அனுமதி பெறாத குழந்தை பாதுகாப்பு  செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்படும். இனிமேல் குழந்தை கடத்தலி்ல் ஈடுபடுவோருக்கு மரணதண்டனையை விட கொடிய தண்டனை வழங்கபடும். பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியோடு மனநல கலந்தாய்வு நடத்தப்படும். இதற்காக குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு விரைவில் சிக்கிம் அல்லது மணிப்பூரில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.


குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள் அவர்களை தொழில் ரீதியாகவோ, படிப்பிலோ கொடுமைப்படுத்த நினைக்கும் பெற்றோர்கள் கூட அஞ்சும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை நேரடியாகவோ அல்லது உறுப்புகளுக்காகவோ, அயல்நாடகளுக்கு கடத்தவோ, விற்பனை செய்யவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவேருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கபப்டும்.


எங்கள் ஆணையத்தின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் பார்த்த லதா ரஜினிகாந்த் தயா பவுன்டேசனும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகளுக்கான குற்றம் 16.4 சதவீதமாக இருந்து தற்போது பாஜக ஆட்சியில் 4 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு டாக்டர் ஆனந்த் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.