ADVERTISEMENT

 6 நாட்களுக்கு முன்பு காணாமல் போன வங்கி ஊழியர் அழுகிய சடலமாக மீட்பு; சாவில் எழும் சந்தேகங்கள்

05:42 PM May 03, 2019 | bagathsingh

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து கடந்த 29 ந் தேதி முதல் காணவில்லை என்று அவர் மனைவி ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் திருவரங்குளம் - வளநாடு இடையே தைலமரக்காட்டில் ஒரு கார் எரிந்துகிடந்தது.

ADVERTISEMENT

அந்த காருக்குள் வளையல்கள் போன்ற கவரிங் நகைகளும், கணினி சம்மந்தப்பட்ட பொருட்களும் எரிந்து கிடந்தது. இந்த கார் காணாமல் போன மாரிமுத்துவின் கார் என்பது அடையாளம் காணப்பட்டது. ஆனால் அதன் பிறகு பரபரப்பு ஏற்படத் தொடங்கியது.


மாரிமுத்து புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்தவர். அவர் காணாமல் போன நிலையில் வங்கியில் ஆய்வுகள் செய்யப்பட்ட போது சுமார் 15 கிலோ அளவிற்கான தங்க நகைகள் காணவில்லை என்று வங்கி நிர்வாகம் வாய்மொழியாக சொன்னாலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இந்த தகவல் பரவியதால் வங்கியில் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்தனர். பலரின் நகைகள் இல்லை என்றும் பணம் தருவதாகவும் வங்கி நிர்வாகத்தில் பதில் சொன்னார்கள். அதாவது மாரிமுத்து நகைகளை அள்ளிக் கொண்டு சிசிடிவி புட்டேஜ், மற்றும் ஆவணங் களையும் அள்ளிச் சென்றதாக தகவல் வெளியானது.


இந்த நிலையில் மணமேல்குடியில் கடல்கரை ஓரத்தில் ஒரு சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்து போலிசார் பார்த்த பிறகு மாரிமுத்துவின் மனைவியை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றனர். அழுகிய நிலையில் சடலம் கிடந்ததால் அவர் அணிந்திருந்த சட்டையை பார்த்து கதறி அழுதார். 6 நாட்களுக்கு முன்பு காணாமல் போன வங்கி ஊழியர் மாரிமுத்து சடலம் தான் என்பதை உறுதி செய்த போலிசார் சடலத்தை தூக்க முடியாது என்பதால் அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அவரது உறவினர்கள் கூறும் போது.. ஒரு அலுவக ஊழியர் மட்டும் இவ்வளவு நகைகளை திருடியிருக்க முடியாது. லாக்கர் சாவிகள் மேல் அதிகாரிகளிடம் தான் இருக்கும். அதனால் சில அதிகாரிகள் நகைகளை திருட மாரிமுத்து உடந்தையாக இருந்திருக்கலாம்.

இப்போது அந்த அதிகாரிகளுக்கு நெருக்கடி வரும் நிலையில் முழு பொறுப்பையும் மாரிமுத்து தலையில் கட்டும் முயற்சியாகத் தான் கணினி பொருட்களையும் எரித்ததாக தெரிகிறது. மேலும் மாரிமுத்து தான் மட்டும் சிக்கிக் கொள்வோமே என்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் மர்ம நபர்கள் மாரிமுத்துவை கொலை செய்து கடற்கரையில் வீசிவிட்டு வழக்கை திசைதிருப்ப காரை எரித்தார்களா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.

நேர்மையான அதிகாரிகள் விசாரித்தால் உண்மை வெளிவரும். இல்லை என்றால் அத்தனை குற்றச்சாட்டுகளும் மாரிமுத்துவோடு புதைக்கப்படலாம் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT