புதுக்கோடை அரசு மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை கல்லூரியின் ஆண்டுவிழா துவங்கி உற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் மேடை ஏறி ‘யமுனை ஆற்றிலே.. ஈரக் காற்றிலே..’ பாடலுக்கு பரதநாட்டிய நடனம் ஆடினார். இதனைக் கண்டு மாணவர்கள் மேலும், உற்சாகம் அடைந்தனர். பரதநாட்டியத்தை முறையாக கற்றுள்ள ஆட்சியர் கவிதா ராமு ஏராளமான அரங்கேற்றங்களைச் செய்துள்ளார். தற்போது அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆடிய பரதநாட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.