Advertisment

போலி ரசீது; அரசு குவாரி மணல் கடத்தல் அம்பலம்; துணை போகும் அதிகாரிகளை காப்பாற்றும் உயர் அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வெள்ளாற்றில் தினசரி 300 டாரஸ் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. பொக்கலின், லாரிகள் பகலில் கரை ஓரங்களில் காத்திருக்கும். இரவில் ஆற்றுக்குள் கடத்தலில் ஈடுபடும். எத்தனையோ புகார்கள், நீதிமன்ற உத்தரவுகள்.. எதற்கும் அறந்தை பகுதி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு நாளும் பல லட்ச ரூபாய் மணல் கடத்தல் காரர்கள் மாமூலாக கொடுப்பதால் மாதம் ஒரு லாரியை பிடித்து வழக்கு போடுவதுடன் சரி. மற்ற நாட்களில் மக்களுக்கும், அரசுக்கும் கணக்கு காட்ட பிழைப்புக்காக மாட்டுவண்டிகளில் மணல் அள்ளும் தொழிலாளிகளை பிடித்து வழக்குப் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Advertisment

lo

இந்த நிலையில் தான் அறந்தாங்கி பெருங்காடு அரசு குவாரியில் இருந்து வெளியூர்களுக்கு போலி ரசீது மூலம் மணல் கடத்தல் நடப்பதை சமூக ஆர்வலர்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகாராக சொன்னார்கள். வழக்கம் போல அமைதியாக இருந்த வருவாய் துறையினர் செவ்வாய் கிழமை மாலை காரைக்குடி சாலையில் சென்ற ஒரு மணல் லாரியை நிறுத்தினார்கள். அந்த லாரி ஓட்டுநர் ஒரு ரசீதை காட்டினார். அந்த ரசீதில் டி.என்.34 ஆர். 0781 என்ற பதிவு எண் இருந்த்து. ஆனால் பிடிபட்ட லாரி எண்ணோ டி.என். 88 1873. அதனால் போலியாக ரசீது தயாரித்து அரசு குவாரியில் இருந்து மணல் திருடப்பட்டு சென்றது தெரிய வந்தது.

இது சம்மந்தமாக அறந்தாங்கி வட்டாட்சியர் சூர்யபிரபு அறந்தாங்கி காவல் நிலையத்தில் போலி ரசீது போட்டு மணல் கடத்தல் என்றும் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் புதுக்கோட்டை குழந்தைசாமி மகன் நித்தியராஜ், காயாம்பட்டி கருப்பையா மகன் அடைக்கலம் ஆகியோரையும் பிடிபட்ட லாரியையும் ஒப்படைத்தார். ஆனால் போலி ரசீது என்று தெரிந்தும் இந்த லாரிக்கு மணல் ஏற்றி அனுப்பி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குவாரி பொருப்பு அதிகாரி மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று ஒரு பெண் காவல் அதிகாரி போராடியும் அவருக்கு மேல் உள்ள மாவட்ட அளவிலான அதிகாரிகள் அதெல்லாம் வேண்டாம் என்றும் பிரச்சனை பெரிதாகும், எதிர்கட்சிகள் தேர்தல் நேரத்தில் பெரிதாக்குவார்கள் அரசுக்கு அவப் பெயர் என்று சமாதானம் சொல்லி மணல் கடத்தலுக்கு துணையாக செயல்பட்ட அதிகாரிகளை வழக்கில் இருந்து மீட்டுள்ளனர்.

Advertisment

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும் போது... அறந்தாங்கி தாலுகாவில் மட்டும் வெள்ளாற்றில் தினசரி இரவில் மணல் கடத்தல் நடக்கிறது. அதை வருவாய்துறை மற்றும், பொதுப்பணித்துறை, காவல் துறை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆறு முற்றிலும் மணல் திருடப்பட்டு வேலிக்கருவை படர்ந்துகிடக்கிறது. நிலடித்தடி நீரும் ரொம்ப கீழே போய்விட்டது. குடிக்க கூட தண்ணீர் கிடைக்கல. ஆனால் அதிகாரிகள் அதைப்பற்றி கவலைப்படல. எல்லாம் மாமூல் தான். இந்த அதிகாரிகள் வாங்கும் மாமூல் பணத்தில் எவ்வளவு நாளைக்கு தண்ணீர் வாங்கி குடிக்கமுடியும். தண்ணீரே இல்லை என்றால் எதை குடிப்பாங்க.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதே போல தான் பெருங்காடு அரசு குவாரியிலும் அளவுக்கு அதிகமாக ஆழமாக மணல் வெட்டி அள்ளப்படுகிறது. அதைவிட அங்கே இருக்கும் அதிகாரிகளே போலியாக ரசீது தயாரித்து ஏதாவது ஒரு லாரி எண்ணை போட்டு டாரஸ் லாரிகளுக்கு பணத்தை வாங்கிட்டு மணல் ஏற்றி அனுப்புறாங்க. அவங்களும் ரசீது இருக்குன்னு காட்டிகிட்டே போயிடுவாங்க.

அப்படி போன ஒரு லாரியை தான் டி.எஸ்.பி. கோகிலா டீம் பிடித்தார்கள். அந்த லாரி ஓட்டுநர், ஓனர் பேர்ல வழக்கு போடுறதோட போலி ரசீதுக்கு மணல் ஏற்றி அனுப்பிய அதிகாரிகள் மீதும் புகார் கொடுத்தால் தான் அடுத்து இதுபோல தவறு செய்ய மாட்டாங்கனு சொல்றாங்க. ஆனா அவருக்கு மெல இருக்கிற மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளே.. அதிகாரிகளை இதில் சிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லி அவங்க பெயர்களை சேர்க்கல. இப்படி திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகளை காப்பாற்றும் போது அடுத்து உள்ள அதிகாரிகளும் அதே திருட்டுக்கு துணை போகத்தான் செய்வார்கள். அப்பறம் எப்படி மணல் திருட்டை தடுக்க முடியும், நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்றனர் விரக்தியாக.

lorry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe