Advertisment

பணியிடப் பாலியல் கொடுமைகளை தடுத்திடு! மகளிர்தினத்தில் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் எஸ்.தேவமணி தலைமை வகித்தார். சிஐடிய மாவட்டப் பொருளாளர் சி.அடைக்கலசாமி, மாவட்ட இணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, ஏ.பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா தொடக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் உரையாற்றினார்.

Advertisment

p

பணித்தளங்களில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணியிடப் பாலியல் கொடுமைகளை தடுத்திடும் வகையில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். கூட்டுறவு தையல் தொழிலாளர்களின் கூலியை உடனுக்குடன் வழங்க வேண்டும். அமைப்புசாரா நலவாரியப்பயன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். பெண் ஊழியர்களின் கன்னியத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisment

ladys CITU puthukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe