Advertisment

மோட்டார் சைக்கிளில் தீ- தாய், மகன் உயிர் தப்பினர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு வெளியே வந்த இரு சக்கர வாகனம் தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ப்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தின கோட்டையைச் சேர்ந்த முகமது மன்சூரும் அவரது தாயாரும் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டு திரும்பி வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்துள்ளது. அவர்கள் சென்ற வழியில் நின்றவர்கள் இதைப்பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக வண்டியை நிறுத்தி பார்க்கும்போது தீ பற்றி எரிந்தது தெரியவந்தது.

Advertisment

ப்

உடனே மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தூரமாக ஓடினார்கள். அக்கம் பக்கத்தினர் மணல் மற்றும் தண்ணீரை ஊற்றி அணைத்தனர் ஆனால் தீ அணையாததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அப்பகுதியில் இரண்டு பெட்ரோல் பங்க் இருப்பதால் இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bike
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe