Skip to main content

மோட்டார் சைக்கிளில் தீ- தாய், மகன் உயிர் தப்பினர்

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு வெளியே வந்த இரு சக்கர வாகனம் தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ப்

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தின கோட்டையைச் சேர்ந்த முகமது மன்சூரும்  அவரது தாயாரும் அருகில் உள்ள  பெட்ரோல்  பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டு திரும்பி வீட்டுக்கு  செல்லும்  போது அவர்கள் சென்ற  மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்துள்ளது.   அவர்கள் சென்ற வழியில்  நின்றவர்கள் இதைப்பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக வண்டியை நிறுத்தி பார்க்கும்போது     தீ பற்றி எரிந்தது தெரியவந்தது. 

 

ப்

 

உடனே மோட்டார் சைக்கிளை  கீழே போட்டுவிட்டு தூரமாக ஓடினார்கள். அக்கம் பக்கத்தினர் மணல் மற்றும் தண்ணீரை ஊற்றி அணைத்தனர் ஆனால்   தீ அணையாததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.   விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அப்பகுதியில் இரண்டு பெட்ரோல் பங்க் இருப்பதால் இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Due to the scorching heat, the two-wheeled vehicle is on incident

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் விஷ்ணு (28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் கோயில் எம்ஜிஆர் கல்லூரி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து ஏதோ புகை வந்ததை அறிந்த விஷ்ணு பதறிப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்க்கையில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் வாகனத்தின் மீது பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு உடனடியாக நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகாமையில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி உள்ளார். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. வாகனம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு சிதறி ஓடி உள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் கோடை காலங்களில் நிலவுகிறது. இந்த ஆண்டு வெப்ப காற்றும், வெப்ப சலனமும் தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக வீசிக் கொண்டிருக்கிறது. வேலூர், திருவண்ணாமலை,  திருப்பத்தூர், விழுப்புரம் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வானிலை மையத்தினரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இந்த அதீத வெப்பத்தால் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிப்பது, தீப்பற்றி எரிவது போன்றவை நடக்கத் தொடங்கியுள்ளன . இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கோடை காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம், டீசல் நிரப்ப வேண்டாம் தினமும் ஒரு முறையாவது பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து அதில் உள்ள காற்றை சிறிது நேரம் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

Next Story

கிணற்றில் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Two people loses theri livetrying to pick up a bike that fell into a well

கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலிங்கம். செங்கல் சூளை தொழிலாளியாக இருந்த ஸ்ரீ லிங்கம் கிணற்றில் விழுந்த பைக்கை எடுப்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதற்கு பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இந்தநிலையில் இருவரும் கிணற்றுள் இறங்கி பைக்கை மீட்க முயன்ற போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்ததால் தண்ணீரில் ரசாயன கலப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுள் இறங்கி ஸ்ரீலிங்கம் மற்றும் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பைக்கை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.