Skip to main content

மொய் விருந்தில் கள்ளநோட்டுகள் கலப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் மொய்விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கீரமங்கலம், மேற்பனைக்காடு பகுதியில் கடந்த மாதம் மொய் விருந்துகள் தொடங்கி  நடந்து வருகிறது. ஆனால் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல் உள்ளிட்ட கிராமங்களில் ஆடி மாதம் மட்டுமே மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முதல் வடகாடு பகுதியில் மொய் விருந்துகள் தொடங்கிவிட்டது.

c


    வடகாடு பகுதியில் மொய் விருந்துகளில் பலருக்கும்  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொய் வாங்குவார்கள். சிலர் ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரை மொய் பணம் வாங்குவார்கள். அதனால் பணம் வாங்கவும், பணத்தை எண்ணி கட்டு போடவும் வங்கி அதிகாரிகளையும் அழைத்து வருவார்கள். மேலும் கடந்த ஆண்டு முதல் பணம் எண்ணும் இயந்திரங்களும் வாடகைக்கு எடுத்து வந்து பணம் எண்ணிய சம்பவங்களும் நடந்துள்ளது. 


இந்த நிலையில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மொய் செய்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பல நேரங்களில் கள்ளநோட்டுகள் மொய் பணத்துடன் கலந்துவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் சமையல் அறையில் வைக்கப்பட்டுள்ள அசைவ உணவுகளும் காணாமல் போவதாக கூறப்பட்டு வருகிறது. 


அதனால் இந்த ஆண்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் கலந்துவிடுவதை தடுக்கும் விதமாக மொய்விருந்து பந்தல் மற்றும் மேலும் உணவில் யாரும் மர்ம நபர்கள் கலப்படங்கள் செய்துவிடாமல் தடுக்க உணவு பாதுகாப்பு அறைகள், உணவு அறைகள் என்று 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  முதல் முறையாக வடகாட்டில் மொய்விருந்து பந்தலில் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் நடந்த படுகொலை; சி.சி.டி.வி கேமராவில் பதிவான பகீர் காட்சி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Incident in maharashtra hotel and scene recorded on CCTV camera

மகாராஷ்டிரா மாநிலம், புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், நேற்று (17-03-24) மதியம் 4 பேர் கொண்ட நண்பர்கள் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஹோட்டலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், டேபிளில் அமர்ந்திருந்த ஒரு நபரை நோக்கி சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த அவர், கீழே விழுந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அங்கு அமர்ந்திருந்த மற்ற நபர்கள் அங்கிருந்து பதறி அடித்து ஓடினர். 

இந்த சம்பவம் அரங்கேறிய சிறிது நேரத்திலேயே, மேலும் 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலில் நுழைந்து, துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன் பின்னர், அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அவினாஷ் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில், நடந்த இந்த கொடூர படுகொலை, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. அந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கொலை செய்த நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

நகைக்கடை உரிமையாளரைக் கடையில் புகுந்து தாக்கிய அதிமுக பிரமுகர்; வெளியான பகீர் சிசிடிவி காட்சி

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
AIADMK leader attacked jewelry shop owner in vellore

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், வேலூர் மாநகர் காந்தி ரோட்டில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில்,  இவர் நேற்று (07-03-24) மாலை வழக்கம்போல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால், ஆனந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து, ஆனந்தன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘சேண்பாக்கம் பகுதியில் எனக்கு சொந்தமான நீச்சல் குளம் இருக்கிறது. இதனால், அதே பகுதியை சேர்ந்த, அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ், தலைமையிலான 4 பேர் அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர். அவர்களை நான் கண்டித்ததற்கு அந்த 4 பேர், என்னுடைய கடைக்கு வந்து என்னை தாக்கி, கடையை சேதப்படுத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, நகைக்கடை உரிமையாளர் தாக்கப்பட்டதால், காந்தி நகர் பகுதியில் உள்ள நகை கடைகள் அடைக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நகைக்கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தெரிவித்தனர்.

AIADMK leader attacked jewelry shop owner in vellore

இதனையடுத்து, நகைக்கடை உரிமையாளர் ஆனந்தன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ஆனந்த் மீது தாக்குதல் நடத்திய அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ், நல்லதம்பி, கார்த்திகேயன், அரவிந்த்சாமி, டக்கர் (எ) ஜானகிராமன் ஆகியோரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நகைக்கடை உரிமையாளரை கடையில் வைத்து தாக்கியபோது பதிவாகிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.