"பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

publive-image

தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது போன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது.

பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று செயல்படுத்தக் கோருகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe