manush

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக செயல்படுதல், போராட்டத்திற்கு தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓமலூர் காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.