
திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்பட்டு முதல்வர் பொறுப்பேற்ற ஸ்டாலின், முதலில் ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக ஆவின் பால் விற்பனை விலை மூன்று ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார். தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1.1/2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆவின், 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு மீதம் இருப்பதை தனியார் மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதில், அதிகபட்சமாக 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ளவற்றை வெண்ணை, தயிர் என மாற்றபட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் உற்பத்தியில் 25 ஒன்றியம் செயல்படுகிறது. இதில் நான்கு வகையான பால் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதில் நீல கலர் சமன்படுத்தப்பட்ட பால் 43 ரூபாய்க்கும், பச்சை கலர் நிலைப்படுத்தப்பட்ட பால் 47 ரூபாய்க்கும், ஆரஞ்சு கலர் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 51 ரூபாய்க்கும், மஜந்தா கலர் கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் 41 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதில் இருந்து 3 ரூபாய் நீக்கப்பட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, இதனால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை, அரசுக்குத்தான் பாதிப்பு இருக்கும். அரசு ஜி.ஓ.வில் விற்பனை விலை மட்டுமே குறைக்கப்படுள்ளது, கொள்முதல் விலையைக் குறைக்கவில்லை. அதனால் பால் உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பு எதுவும் இருக்காது. தனியார் நிறுவனத்தில் மட்டும்தான் விற்பனை விலை குறைத்தால், கொள்முதல் விலையும் குறைக்கப்படும். ஆனால் ஆவின் அப்படி செய்யவில்லை, அதேபோல, முகநூல் பக்கங்களில் சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என்கிறார் ஆவின் பால் இயக்குநர் டாக்டர் நந்தகோபால்.