
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே பூரான் விழுந்த குருமாவை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் பகுதியில் உள்ளது எட்டிக்கொட்டைமேடு பகுதி. இந்த பகுதியில் முருக விலாஸ் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கச்சுப்பள்ளி பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன், கலையரசன் ஆகிய இருவர் பரோட்டா பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர். மொத்தம் 7 பரோட்டா வாங்கிச் சென்ற நிலையில் இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
முதலில் ஆளுக்கு இரண்டு பரோட்டாக்கள் சாப்பிட்டுவிட்டுகடைசி மூன்று பரோட்டாக்களை ஆளுக்கு பாதியாகபிரித்து சாப்பிட குருமாவை ஊற்றியபோது அதில் பூரான் கிடந்தது கண்டு அதிர்ந்தனர். அதையடுத்து சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். உடனடியாக இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும்உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)