Skip to main content

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குட்டி நாய்... போராடி மீட்டவர்களுக்குக் குவியும் பாராட்டுகள்!

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Puppy trapped in a deep well ... Congratulations to those who fought and rescued!

 

திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட நாயை ஐந்து மணிநேரம் போராடி மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சொந்த செலவில் ஜேசிபியை கொண்டுவந்து மீட்பு பணியில் உதவிய நபருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

திருவாரூர் மாவட்டம் குன்னியூர் பகுதியில் உள்ள 30 அடி ஆழம்கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்றில் சிறிய நாய்க்குட்டி தவறி விழுந்த நிலையில் நாய் குட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தொடர்ந்து எப்படியும் நாய் குட்டியை மீட்டு விடலாம் என முதலில் கயிற்றில் சுருக்கு போட்டு நாய்க்குட்டியை மீட்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் அந்த ஆழ்துளை கிணறுக்கு அருகேயே ஜெசிபி மூலம் குழிதோண்டி நாயை மீட்கலாம் என ஆலோசனை தெரிவித்த நிலையில் நிலத்தின் உரிமையாளரான மூர்த்தி உடனடியாக ஜெசிபியை ஏற்பாடு செய்தார்.

 

அதன்பிறகு எப்படியும் நாயை மீட்டுவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் ஜெசிபி மூலம் குழி தோண்டப்பட்டது. திட்டத்தின்படியே இறுதியில் நாய் உயிருடன் மீட்கப்பட்டது அங்கிருந்தோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதனையடுத்து நாய்க்குட்டியை மூர்த்தி பெற்றுக்கொண்டார். அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.