Skip to main content

வெள்ளத்தில் சிக்கித் தவித்த குட்டி நாய் - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 'மீட்பு'

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Puppies trapped in the flood! -Fighting rescue troops!

 

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில், காட்பாடியில் வெள்ளத்தில் சிக்கிய தாய் நாய், அதன் குட்டிகளுடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

Puppies trapped in the flood! -Fighting rescue troops!

 

Puppies trapped in the flood! -Fighting rescue troops!

 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த வெள்ளத்தில் தாய் நாயும், அதன் குட்டிகளும் சிக்கிக்கொண்ட அலறின. அதனைத் தூரத்திலிருந்து கண்ட மக்கள், பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தெரிவித்தனர். வெள்ளத்திற்கு நடுவிலிருந்த புதர் ஒன்றில் நாயும் குட்டியும் சிக்கிக்கொண்ட நிலையில், நீரைக் கடக்க முயன்ற நாய்க்குட்டி தண்ணீரில் அடித்து சிறிது தூரம் சென்றது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாகச் செடிகளைப் பிடித்து மீண்டும் அதேபோன்ற புதரில் சிக்கியது. உடனடியாக உள்ளே இறங்கிய மீட்புப் படையினர், கயிற்றைப் பயன்படுத்தி தாய் நாயையும் குட்டி நாய்களையும் காப்பாற்றினர். 

 

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், வெள்ளத்தின் தன்மை அறியாது எப்படியாவது கடந்துவிடலாம் என குட்டி நாய் நீரில் இறங்க.. அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் நபர் பதற்றத்தில், ''அடடா ஆண்டவா... காப்பாத்தி விட்ரலாம்'' எனக் கூறுவது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

கல்குவாரியில் விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A worker who went to bathe in Calquary died

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அடுத்த பொன்னாச்சி பகுதியைச் சேர்ந்தவர் புட்டப்பா (50). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பெஜிலட்டி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் கல் சைனிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பருடன் அதேப்பகுதியில் உள்ள மற்றொரு கல்குவாரியில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் மூழ்கினார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக இது குறித்து கல்குவாரியில் உள்ள மேலாளர் இடம் தகவல் தெரிவித்தார். பர்கூர் போலீசாரும், அந்தியூர் தீயணைப்பு  வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் புட்டப்பாவை தேடினர். இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று 2 -வது நாளாக தேடும் பணி நடந்தது. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புட்டப்பா உடல் மீட்கப்பட்டது.இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.