Skip to main content

வங்கி ஊழியர் மாயம்.. காட்டுக்குள் எரிந்துகிடக்கும் கார்.. வங்கியில் ஆய்வு!!! 

Published on 01/05/2019 | Edited on 01/05/2019


புதுக்கோட்டை நகரையொட்டியுள்ள திருக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை  தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 29ந் தேதி முதல் மாரிமுத்துவை காணவில்லை. இந்த நிலையில் அவரது கார் மட்டும் திருவரங்குளம் வளநாடு காட்டுப்பகுதியில் எரிந்து கிடந்தது.
 

punjab national bank



காருக்குள் சில வளையல்களும் எரிந்து கிடந்தது. முதலில் யாருடைய கார் என்பது தெரியாமல் இருந்தது. பிறகு விசாரணையில் அந்த கார் மாரிமுத்துவின் கார்தான் என்பது அடையாளம் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். எரிந்து கிடந்த கார் வங்கி ஊழியர் மாரிமுத்துவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. 
 
போலீசார் கார் எரிந்தது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். மேலும் அவர் வேலை செய்த வங்கியிலும் போலிசார் விசாரணை செய்துவந்த நிலையில் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் வங்கியில் அதிகாரிகள் ஆய்வுகள் செய்தனர். நகை, பணம் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளது.
 

punjab national bank



இந்நிலையில் வங்கி ஊழியர் மாரிமுத்துவின் மனைவி ராணி தனது கணவர் கடந்த 29 ந் தேதி முதல் காணவில்லை என்று கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வங்கி ஊழியர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையா அல்லது வங்கியில் ஏதேனும் பிரச்சனையால் காரை எரித்துவிட்டு தலைமறைவாகி உள்ளாரா? அல்லது மாரிமுத்துவை யாரேனும் கடத்தி இருப்பார்களா என்ற கோணத்தில் 3 தனிப்படைகள் அமைத்து போலிசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கியில் ரூ. 3,600 கோடி கடன் வாங்கியதில் மோசடி செய்த பிரபல நிறுவனம்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

pnb complaints dhfl to rbi

 

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனம் ரூ. 3,688.58 கோடி கடன் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் சார்பில், ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

 

DHFL நிறுவனத்திற்கு நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் பேங்க் மும்பையில் உள்ள கார்ப்பரேட் கிளை மூலம் கடன் கொடுத்துள்ளது. இதில் அந்நிறுவனத்தின் செயல்படாத சொத்து கணக்கின் மூலம் மோசடி நடந்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ஒரு லட்சம் கோடி அளவிலான கடன்களை பல்வேறு வங்கிகளில் பெற்றுள்ள DHFL நிறுவனம்,  அந்த வங்கிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

மோசடியின் அளவையும் கண்டறியும் வகையில், அதிகாரிகள் அந்நிறுவனத்தின் ஆவணங்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளும், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸின் கணக்குகளில் மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது மிகப்பெரிய மோசடி இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் நகை வியாபாரி நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ரூ.11,300 கோடி மோசடியில் பஞ்சாப் நேஷனல் பேங்க் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

3 முறை தோல்வி 4- வது முறை 5 கோடி, 5- வது முறை 13 கோடி... வெளிவராத அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் கடந்த 2- ஆம் தேதி அதிகாலை நகைக்கொள்ளையில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்ததில் முருகன் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுடைய கூட்டாளிகளை தொடர்ச்சியான கைதுக்கு, பிறகு அவன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.

 

இந்த நிலையில் பெங்களூரில் இருந்த முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து நகைகளை மீட்டு, பெரம்பலூரில் வைத்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வருடம் ஆரம்பத்தில் ஜனவரி மாதம் உப்பியபுரத்தில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி, அதை அடுத்து கடந்த 18- ஆம் தேதி மண்ணச்சநல்லூர் மத்திய கூட்டுறவு வங்கி கொள்ளையடிக்க முயற்சி, கடந்த 21- ஆம் தேதி மண்ணச்சநல்லூரில் உள்ள பஞ்சாப் வங்கியில்  கடன் வழங்கும் நிதியை கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருந்தாதாலும், லாக்கர்களை உடைக்க முடியாததாலும் வங்கிகளை கொள்ளையடிக்க முடியவில்லை. இதையெல்லாம் பாடமாக வைத்து தான், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கரெக்டாக அடித்து விட்டோம்.

trichy lalithaa jewellery thief murugan team welding ganesh

 

எல்லா வங்கி கொள்ளை முயற்சியும் தொடர் விடுறை இருப்பதை கணக்கில் வைத்து தான்.. கொள்ளையடிக்க திட்டமிட்டோம். முதல் 3 வங்கியில் முயற்சி தோல்வி அடைந்தது. 4- வது இந்த வங்கியில் மாடியில் துளையிட்டுதான் உள்ளே இறங்கி கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி கொள்ளையடித்தோம். மொத்தம் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே லாக்கரில் மட்டும் 100 பவுன் நகைகள் இருந்தது. எங்களுக்கு வெல்டிங் பண்ண ராதாகிருஷணன், நான், சுரேஷ், மற்றும் கணேஷன் ஆகியோர் பண்ணினோம் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

trichy lalithaa jewellery thief murugan team welding ganesh

 

இந்த நிலையில் திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது..  லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ், வாடிப்பட்டி கணேஷ், தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணனை திண்டுக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்துள்ளோம் என்றார்.