திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் 25.10.2019 அன்று மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில் தொடர்ந்து 72 மணி நேரமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

punjab expert is coming to help surjith rescue mission

அரசாங்கத்தை கடந்து பல தனி நபர்களும், தனியார் அமைப்புகளும் கூட இதில் உதவி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியின் முயற்சிகளின்படி, குழந்தையை மீட்பது குறித்து ஆலோசனை வழங்க பஞ்சாபில் இருந்து விவசாய தொழில் நுட்ப நிபுணர்களான குரிந்தர் சிங், ஹர்விந்தரசிங் ஆகிய இருவரும் நடுக்காட்டுப்பட்டி வர உள்ளனர்.இரவு 11.30 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வரும் இவர்களைநடுகாடுபட்டிக்கு அழைத்துச்சென்று அமைச்சர் விஜயபாஸ்கரை சந்திக்க வைக்க உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.