Puncture Shop Accident; 4 people were seriously injured

பஞ்சர் ஓட்டும் கடையில் இருந்த ஏர் கம்ப்ரசர் வெடித்ததில் நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் பஞ்சர் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் லாரிக்கு பஞ்சர் ஒட்ட வந்துள்ளனர். பஞ்சர் போட்டுக் கொண்டிருந்த பொழுது பஞ்சர் போடுவதற்குp பயன்படுத்த வைத்திருந்த ஏர் கம்ப்ரசர் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். கை, கால் முறிவு ஏற்பட்டநான்கு பேரையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த லிங்கப்பா, முத்து ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், லத்திப், முருகன் என்றஇருவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பாகலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.