ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் 40 பேர் உயிரிழந்தனர்.இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி. சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

Advertisment

Subramanian and Sivachandran

சிவச்சந்திரன் மற்றும் சுப்ரமணி ஆகியோர் குடும்பத்தினருக்கு சென்னை கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன்ஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று இந்த நிதிக்கான காசோலை அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.