pukar prize nominated perumal murugan pookuzhi tamil novel  

இலக்கிய விருதுகளில் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது புக்கர் பரிசு ஆகும். இந்த விருதானது ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களுக்குஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான போட்டியில் தமிழக எழுத்தாளர்பெருமாள் முருகன் எழுதிய "பூக்குழி" என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான'பைர்' என்ற நாவல் இடம்பெற்று உள்ளது. இந்த நாவல் 2016 ஆம் ஆண்டு வெளியானது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தகாதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு செல்வதைப்பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இந்த நாவல் கதைக்களமாககொண்டு விவரிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் அனிருதன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.

Advertisment

இதுகுறித்துஎழுத்தாளர் பெருமாள் முருகன் முகநூலில், "தமிழ் நாவல் ஒன்று (பூக்குழி) புக்கர் பரிசுக்குரிய நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்"என்று தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்".