Advertisment

“அதிமுகவின் வாக்கு விஜய்க்கு செல்ல வாய்ப்பு உள்ளது” - புகழேந்தி எச்சரிக்கை

Pugazhendi warning There is a possibility that AIADMK vote will go to Vijay

மருது சகோதரர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி கலந்துகொண்டு மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி, “மருது சகோதரர்கள் வேலு நாச்சியார் வாழ்க்கையின் வீர வாழ்க்கை, புகழ் குறித்து பேசினார். தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில் சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் தேவர், வேலுநாச்சியார் மூவருக்கும் சிலை நிறுவப்பட வேண்டும். அந்த சிலையையும் நானே தருகிறேன். அதுமட்டுமின்றி மருது சகோதரர்களுக்கும் தனி இடத்தில் தனி சிலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisment

Pugazhendi warning There is a possibility that AIADMK vote will go to Vijay

அதிமுகவை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி உள்ளதுக்கு பாராட்டு. அவர் எக்காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம். நடிகர் விஜய் மாற்றத்திற்காக வருகிறார். அந்த மாற்றம் உங்களால் வரட்டும். விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாற்றம் வேறு மாதிரி இருந்திருக்கும். நடிகர் ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. கமல் வேறு விதமாக அரசியல் செய்கிறார். நடிகர் விஜய்யினால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் பாதிப்பு வரும். அதிமுக ஓட்டு விஜய்க்கு சென்று விடும். புதிய வரவுகளால் அதிமுகவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும்.

சசிகலா, ஓபிஎஸ் என அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாகச் செயல்பட வேண்டும். அதிமுக தொண்டர்களும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி வேண்டும் என்று தான் கூறுகிறார்கள். அதிமுகவை தற்பொழுது உள்ள தலைவர்கள் நடத்தவில்லை. பாஜக தான் நடத்துகிறது. தற்போது சோதனை செல்லும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்கவில்லை? பாஜகவை பார்த்து இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் பயம். எஸ்.பி வேலுமணி பாஜக கனவில் இருக்கிறார். அதனால் அவர் எதுவும் பேச மாட்டார்.

நடிகர் விஜய்க்கு வாழ்த்துக் கூறினாலும், இந்த கட்சியில் இருந்து பிரிந்து வரமாட்டேன். அவரின் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோருக்கு பெரிய கட்அவுட் வைத்ததற்குப் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய்யின் கோட்பாடுகள் பெரியாரின் கோட்பாடுகளாக இருக்க வேண்டும். தற்பொழுது உள்ள சூழலில் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து நிமிடம் இறங்கி வந்தால் அனைத்தும் மாறிவிடும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி திருந்துவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிச்சாமி தானே. ஆனால் தற்பொழுது திமுகவை கை காண்பிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை” என்றார்.

admk Pugazhendi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe