Pugazhendi met OPS in person and expressed his condolences

Advertisment

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாகச் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (1ஆம் தேதி) காலை காலமானார். மருத்துவமனையில் இருந்த அவரின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினார். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் நேரில் சென்றுஅஞ்சலி செலுத்தி, ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினர். நேற்று பிற்பகல் அவரது உடல் சென்னையிலிருந்து ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின், மருத்துவமனைக்கு வந்த சசிகலா, ஓ.பி.எஸ்.-ஐ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Pugazhendi met OPS in person and expressed his condolences

இன்று, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பெரியகுளத்திற்குச் சென்ற அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவிக்கு அஞ்சலி செலுத்தி, அவருக்கு ஆறுதல் கூறினார்.